முகாநூளில் தொடர

ஞாயிறு

நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா ? மிகப்பெரிய ஆபத்து!



நீங்கள் கூகுல் குறோமி பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கூகுல்குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.

அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா? நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது.

நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம் அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நாம் சொல்வது போல் செய்தால் போதும். எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.

அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setuff என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது.

1 கருத்து:

  1. "சேமிக்கவா...?" என்று கேட்குமே...

    இருந்தாலும் பிரவுஸிங் சென்டர்களில் கவனம் தேவை...

    பதிலளிநீக்கு

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.