முகாநூளில் தொடர

வியாழன்

அகதி அடையாளம்

 

80-களில் ஐரோப்பாவுக்குச் சென்றவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. அவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக வளர்ந்திருக்கிறார்கள். ஆனால், தாய் நிலம் என்று சொல்லக்கூடிய தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகளில் மருத்துவராக உருவான ஓர் ஈழ அகதியைக்கூட நீங்கள் பார்க்க முடியாது. இதுதான் இங்கு அவர்களின் நிலை. இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரியக் கொடுமை க்யூ பிரிவு போலீ ஸாரின் துன்புறுத்தல்கள்தான். தொடர்ந்து கண்காணிப்பது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகள் போடுவது எனத் தொடர்கிறது க்யூ பிரிவு போலீஸாரின் மனித உரிமை மீறல்கள். இன்னொரு பக்கம் ஐ.நா- வுக்கான அகதிகள் சாசனத்தில் இந்தியா கையெழுத்திடாத காரணத்தால், இந்த அகதி களுக்கு எந்த உரிமையும் வழங்காமல் குற்றப்பரம்பரையினரைப் போல வைத்திருக் கிறார்கள். இந்தியா கையெழுத்திடாத காரணத்தால் இந்த அகதிகள் விஷயத்தில், ஐ.நா-வும் தலையிட முடியாது. இத்தனை துன்பங்களையும் தாங்கி இங்கே அன்றாடம் செத்துச் செத்து வாழ்வதைவிட, கடல் தாண்டி சுயமரியாதையான ஒரு வாழ்வைத் தேடிச் செல்கிறார்கள். மரணம் உடன்வரும் பயணம் என்று தெரிந்துதான் கடல் கடக் கிறார்கள் என்றால், அதைவிட இந்த வாழ்வைத் துன்பமாக நினைக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை!'' என்கிறார் புகழேந்தி.
அகதிகளுக்கு தமிழக அரசு என்ன செய்கிறது?

குடும்பத் தலைவருக்கு மாதம் 1,000 ரூபாய். 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 750 ரூபாய். 12 வயதுக்குக் கீழானவர்களுக்கு 400 ரூபாய். பெரியவர்களுக்கு நாளன்றுக்கு 400 கிராம் அரிசி.
எட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு 200 கிராம் அரிசி. சமீபமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. முதியவர்களுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியம். சர்க்கரை, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை ரேஷனில் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏன் ஆஸ்திரேலியா?

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல 30-ல் இருந்து 35 லட்சங்கள் வரை ஆகும். ஆனால், ஆஸ்திரேலியப் பயணத்துக்கு அதிகபட்சம் இரண்டு லட்ச ரூபாய் போதும். இலங்கையில் போர் முடிந்த பின்னர் தஞ்சம் கோரி சன் சீ என்ற கப்பல் கனடாவில் கரையேறியது. அந்தக் கப்பல் ஆடுகளை ஏற்றி இறக்கப் பயன்படுத்தப்பட்ட கப்பல். சற்றே பெரிய ஆழ்கடல் மீன்பிடியிலிருந்து 'ஓய்வளிக்கப்பட்ட’ பழைய படகுகள் வரை இவர் களின் தொலைதூரக் கடல் பயணத்துக்குப் பயன் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல 20-ல் இருந்து 22 நாட்கள் வரை ஆகும். இந்த நாட்களுக்கான உணவுகள், குடிநீர், டீசல் போன்றவற்றைச் சேமித்துக்கொண்டு மீன் பிடிக்கக் கிளம்புவதுபோலக் கிளம்புகிறார்கள். தொழில்முறை படகோட்டிகளோ நீச்சலில் தேர்ந்தவர்களோ இல்லா ததால், தவறி கடலில் விழுபவர்களைக் காப்பாற்றுவதற்கான வழிவகைகூட இல்லாமல் அப்பாவி அகதிகளை ஏற்றியபடி செல்கின்றன இந்த அகதிப் படகுகள். பிரமாண்ட கப்பல்களே தவிர்க்கும் கொந் தளிப்பான கடல் பரப்பைக் கடந்தால் மட்டுமே, சென்று சேர வேண்டிய அந்த கனவுத் தீவை இவர்கள் அடைய முடியும்!

அகதி என்ற ஓர் அவமானத்தைச் சுமந்து எந்த நேரமும் இலங்கைக்குத் துரத்தப் படலாம் என்ற அச்சத்தோடு வாழும் ஈழ அகதிகளில் 15 ஆண்டுகளாக இங்கு வாழ்வோரின் விருப்பத்தைக் கேட்டறிந்து அவர் களுக்குக் குடியுரிமை கொடுக்க வேண்டும். இல்லையெனில், துயரப் பெருங் கடலில் நாடற்றவர்களாக மிதந்துகொண்டிருக்கும் ஈழ அகதிகளின் கனவுகளை, கடலில் கரைத்த பாவிகளாகியிருப்போம். ஆகவே மத்திய மாநில அரசுகளே... இந்த மக்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்!
நன்றி : (அருள் எழிலன்) & விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.