முகாநூளில் தொடர

ஞாயிறு

தன்னடக்கம் - ஒரு சிறு கதை

 
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

4 கருத்துகள்:

  1. காற்றில் வேகமாக ஓலமிட்டு பறந்து செல்லும் தக்கைதான் வலியது என்று நினைக்கும் உலகமிது. நல்ல நீதிகதை

    பதிலளிநீக்கு
  2. தீபக் குமார் பின்னூட்டத்திற்க்கான word verification ஐ நீக்கவும் அது பின்னூட்டும் இடுபவர்களுக்கு இடைஞ்சலை கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் விண்ணப்பம் பூர்த்திச் செய்யப்பட்டது....

    பதிலளிநீக்கு

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.