முகாநூளில் தொடர

சனி

வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..! - சிறுகதை

ஒரு கிராமத்துக்கு ஒரு யோகி வந்தார். அவர் முகத்தில் தெய்வீகக்களை வீசியது. எல்லோரு அவரிடம் சென்று "சுவாமி.. ஏதாவது சொல்லுங்கள்..?" என்று கேட்டனர். அதற்கு யோகி "வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..!" என்றார்.. மறுநாளும் எல்லோரும் சென்று "ஏதாவது சொல்லுங்கள்..!" என்று பணிவுடன் கேட்டனர். மீண்டும் அவர் "வாழ்கையை ஆனந்தமாக வாழுங்கள்..!" என்றே சொன்னார். சிலநாள் இது தொடர வருகை தந்தவர்கள் வராமலே போனார்கள்.

அவரைக் கண்டாலே பலர் "ஐயோ.. போதுமய்யா..!" என்று ஒடினார்கள்.. முடியாது போக கிராம தலைவர் கோபமாக கேட்டார். "முதற்தடவை கேட்கும் போது நன்றாக இருந்தது. ஆனால் அதையே எத்தனை தடவை கேட்பது.. வேறு போதனைகள் கொடுக்கலாமே..?" என்றார்.

யோகி புன்னகையோடு சொன்னார். "என்னிடம் இன்னும் நிறைய போதனைகள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் இன்னமும் என் முதல் போதனையையே கடைப்பிடிக்கவில்லையே, உணர்வு பூர்வமாக அது உங்கள் வாழ்வின் முறையாக மாறிவிட்டால் நான் அடுத்த போதனையைக் கொடுக்கிறேன்..!"

இப்படிதான் ஆன்மீகங்களை கேட்பதுவும் வாசிப்பதும் என்று நம் அறிவு செல்கிறதே தவிர.., அவை செயலில் அல்ல. என்று நாம் கற்றவை வாழ்வில் செயல்ப் படுகிறதோ.. அப்போதுதான் அவை பூரணம் அடைகின்றன.

1 கருத்து:

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.